இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்

🕔 August 4, 2022

லங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே 28ஆம் திகதி, ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில், நேற்று மாலை ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இவரின் கைதுக்கு எதிராக இன்று கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்க முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான ஆக்கம்: ஒரே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு பதவி, இன்னொருவர் கைது: ரணிலின் கோர இரட்டை முகம்

Comments