எரிபொருள் திருட்டு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம்: கொலையில் முடிந்தது

🕔 July 25, 2022

ரிபொருள் திருடியதாக ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொரளையில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் இன்று (25) அதிகாலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடுவது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மோட்டார் சைக்கிள் உரிமையாளரை சந்தேக நபர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பொரளையில் வசிக்கும் 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் – பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments