தலைப்புச் செய்திகள்

ரணிலின் இடத்தை நிரப்ப வரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த எம்.பி யார்?

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானமையை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்புரிமை மூலம் நாடாளுமன்றம் பிரவேசித்தார்.

எனவே, தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யும்.

கடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் வென்றெடுக்க முடியாமல் படுதோல்வியடைந்த நிலையில், அந்தக் கட்சிக்குக் கிடைத்த ஒரேயோரு தேசியப்பட்டில் பிரதிநிதித்துவம் மூலமாக ரணில் – நாடாளுமன்றம் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக யார் தெரிவுசெய்யப்படுவார் என்பது அடுத்த கேள்வியாகும்.