
பாடசாலை விடுமுறையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) வரை நீடிக்க கல்வி அமைச்சு இன்று தீர்மானித்துள்ளதுடன் பாடசாலைகள் திங்கட்கிழமை (25) திறக்கப்படும்.
அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உட்பட மேலதிக செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று அமைச்சில் இணையம் ஊடாக இடம்பெற்றது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வியாழன் (21) முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க அமைச்சு தீர்மானித்திருந்தது.



