
பேக்கரிப் உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 450 கிராம் எடையுடை பாண் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



