தலைப்புச் செய்திகள்

பணவீக்கம்: உலகளவில் இலங்கை மூன்றாமிடம்

உலகில் அதிக பண வீக்கம் கொண்ட நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர், பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்க் என்வரின் பணவீக்கச் சுட்டெண்ணுக்கமைய, இந்த இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை இடண்டாம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால், தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும்.

இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.

இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஸிம்பாப்வே முதல் இடத்திலும் இருந்தது.

ஸ்டீவ் ஹாங்கின் சமீபத்திய குறியீட்டின் படி, துருக்கி இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.