தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல்

🕔 June 8, 2022

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொண்டர்கள் பலர் மே 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டனர்.

கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலிலும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்களாக இவர்கள் பெயரிடப்படவுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் 16 பேருக்கு எதிராக நீதிமன்றத்தினால் ஏற்கனவே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் தலைமறைவாக உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அந்தக் கட்சியின் தொண்டர்களும் ஏற்கனவே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உறுத்தரவுக்கமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்