அமைச்சர்களுக்கு சம்பளமில்லை: அமைச்சரவை தீர்மானம்

🕔 June 7, 2022

மைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் ஒருவருட காலத்துக்கு சம்பளமின்ற பணி புரிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை இன்று (07) கூறினார்.

பிரதமர் சமர்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், அமைச்சர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நாளொன்றின் வருமானம் 04 பில்லியன் என்றும், நாளொன்றின் செலவீனமாக 09.6 பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் பந்துல இதன்போது மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்