எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

🕔 May 10, 2022

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழுவொன்று கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று (10) இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளார்.

தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடிய போதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்”? என சிங்களத்தில் கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அவரை மீட்டு, அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது நேற்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை கட்டுப்படுத்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்