
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் என – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று (19) காலை தொடக்கம் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
இந்த சம்பவத்துக்கு தனது டுவிட்டரில் பதிவில், பதிவிலேயே சாணக்கியன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஒரு உயிர் பலி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



