
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜிட் நிவாட் கப்ரால் பதவி வகித்த காலப்பகுதியில், பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



