
ராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்துள்ளார்.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகித்தார்.
ஜீவன் தொண்டமானுடன், இ.தொ.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானிதுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும் மக்களுக்காக முன்னிற்கவும் இ.தொ.கா தயாராக இருக்கின்றதென்றும் குறிப்பிட்டுள்ளார்.



