மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுவிப்பு

🕔 March 31, 2022

ரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால், அந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொலை வழக்கு ஒன்றில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட நால்வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இருந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) விடுதலை செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த முடிவை அறிவித்தது.

2015 ஆம் ஆண்டு கஹவத்தையில் நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதித்தது.

ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தன்னை விடுவிக்குமாறு தனது மேன்முறையீட்டில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்பான செய்தி: மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்