இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக் கல்லை கொள்வனவு செயவதில், வல்லரசுகள் போட்டி

🕔 December 16, 2021

நாட்டில் கண்டெடுக்கப்பட்டு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக் கல்லை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவுக்கும்ட சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நீலக்கல்லை, இணையவழியில் நடைபெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்காக ஐக்கிய அரபு ராச்சியம் முன்னதாக விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ள நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வொஷிங்டன் நகரிலுள்ள நூதனசாலை ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவும் குறித்த இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

310 கிலோகிராம் எடைகொண்ட ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் இந்த நீலக்கல்,  ரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இந்த நீலக்கல் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு

Comments