நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

🕔 October 12, 2021

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கடந்த 06ஆம் திகதி – வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அதேவேளை வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே அழுத்தம் காரணமாக வந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து அந்த நிகழ்ச்சிப் பதிவு நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

நாடாளுமுன்ற உறுப்பினர் முஷாரப் குறித்து, மேற்படி நிகழ்ச்சிப் பதிவின் கீழ், அதிகமானோர் மிக மோசமாக கருத்துக்களை (கொமன்ற்) பதிவிட்டமை காரணமாகவே, அது நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து மேற்படி பதிவு நீக்கப்பட்டமை தொடர்பில் ‘விடிய’ல் இணையத்தளம் செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அதனை ‘புதிது’ செய்தித்தளமும் பதிவு செய்தது.

இந்தப் பின்னணியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் கலந்து கொண்ட – ‘தீர்வு’ நிகழ்ச்சியின் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

தொடர்பான செய்தி: முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது

Comments