மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது

🕔 October 9, 2021

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் [கஜமுத்து] வவுனியாவில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க, நேற்று வவுனியாவில் உள்ள உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர்கள் கைதாகினர்.

அக்குரணை, மஹாவ மற்றும் நிகவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த 29, 30 மற்றும் 53 வயதுடைய சந்தேகநபர்கள், யானை முத்துக்கள் நான்கினை (04) விற்பனை செய்வதற்காக அங்கு வந்த போதே கைதாகினர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

Comments