‘ஆயிரம் நிலவே வா’ பாடலாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

🕔 September 8, 2021

பிரபல கவிஞரும் இந்தியத் திரைப்படப் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (08) காலை காலமானார். அவருக்கு 86 வயதாகிறது.

இவர் ஆயிரம் நிலவே வா (அடிமைப் பெண்), நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற (இதயக்கனி), உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) தென்பாண்டிச் சீமையில (நாயகன்) உள்ளிட்ட பல பிரபல்யமான திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராக, அரசவைக் கவிஞராக மற்றும் அதிமுக அவைத்தலைவராகவும் பல்வேறு பதவிகளை புலமைப்பித்தன் வகித்ததுள்ளார்.

வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தா நிலையிலேயே மரணமானார்.

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், சென்னை சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

மரபுக்கவிதைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற புலமைப்பித்தன் எழுதிய ஏராளமான திரைப்பாடல்கள் மூலம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

வடிவேலு நடித்த எலி (2015) திரைப்படத்தில் தனது கடைசிபாடல்களை அவர் எழுதினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததன் காரணமாக பல்வேறு அரசியல் பதவிகளை அவர் வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்