தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

🕔 August 26, 2021

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். 

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டை மூடுவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்பதை உலகின் அனைத்து நாடுகளும் இப்போது ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா என்பது குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நாளைய தினம் கூடும் ஜனாதிபதி தலைமையிலான குழு இது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்