தலைப்புச் செய்திகள்

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை தொடக்கம் இந்த ஊரடங்குச் சட்டம் – மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியவசியத் தேவைகளின் பொருட்டு பயணிப்போருக்கு இதன்போது சலுகை வழங்கப்படும்.

ஏற்கனவே, நாட்டில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை