அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு

🕔 June 8, 2021

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றா நோய்களுக்கான ( NCD) கிளினிக் சிகிச்சை பெறுவோர், தற்போதைய சூழலில் தமக்கான மருந்துகளை வைத்தியசாலையில் இருந்து தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, 07.11.2020 தொடக்கம் 07.03.2021 வரை தொற்றா நோய்களுக்கான கிளினிக் சிகிச்சை பெறுவோருக்கு, கொவிட் 19 தொற்று காரணமாக தபால் சேவையின் ஊடாக 11500 மருந்துப் பொதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் தபால் சேவையின் மூலம் நேற்று (07ஆம் திகதி) முதல் மருந்துப்பொதிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து தேவைப்படுவோர் 0704 981 879 அல்லது 0771 981 879
ஆகிய கைத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மருந்துப்பொதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்