தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின்

🕔 May 2, 2021

ந்தியாவின் தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டானின் பொறுப்பேற்கவுள்ளார்.

தமிழக சட்ட சபைக்கான தேர்தல், கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், அதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது.

அந்த வகையில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 130க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

தமிழக சட்ட சபை 234 ஆசனங்களைக் கொண்டதாகும்.

தி.மு.க பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம் 10 வருடங்களின் பின்னர் அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Comments