நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு

🕔 November 20, 2015

Mahinda - 096
– அஸ்ரப் ஏ. சமத் –

யங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ்,  இந்த நாட்டிலிருந்த பயங்கரவாதிகளை பிடித்து, தாம் சிறையில் அடைத்தாகவும், ஆனால் இந்த அரசு –  பயங்கரவாதிகளை விடுதலை செய்து வெளியில் விட்டுவிட்டு,  பயங்கரவாதிகளை அடக்கிய ராணுவத்தினரைப் பிடித்து சிறையில் அடைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் நிறுவனத்துக்கு 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது,  நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியா் ஜி.எல். பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக்ச, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவா் அநுர சிறிவா்ததன உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

காலை 08.30 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை விசாரணை மேற்படி விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் பின்னர் ஊடகலவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

இந்த விசாரணை மீண்டும்  டிசம்பா் 17 மற்றும் 18ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில், எனது பக்கம் எவ்வித ஓழுங்கீனமும் நடைபெறவில்லை.

ஊடகவியலாளா்   கேள்வி:  தமிழ் அரசியல் கைத்திகள் விடுதலை செய்வதில் தங்களது கருத்து என்ன ?

பதில்:  பயங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ்,  இந்த நாட்டிலிருந்த பயங்கரவாதிகளை பிடித்து சிறையில் அடைத்தோம். ஆனால் இந்த நல்லாட்சி அரசு,  அவா்களை விடுதலைசெய்து வெளியில் விட்டுவிட்டு,  பயங்கரவாதிகளை அடக்கிய ராணுவத்தினரைப் பிடித்து சிறையில் அடைக்கின்றனா்.

ஊகடவியலாளா் கேள்வி:  இந்த வரவு செலவுத்திட்டத்தினைப் பற்றி உங்கள் கருத்து என்ன

பதில்:  விவசாயிகளுக்கு பசளை மானியம் போன்ற பல நன்மைகளை வழங்கினோம். ஆனால், இவை எதனையும் இந்த அரசு, இல்லாமல் செய்து விட்டது.Mahinda - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்