நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

🕔 January 21, 2021

ணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, மீண்டும் சேவையில் அமர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக நீதி சேவை ஆணைக்குழு விரையில் கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளது.

தற்போது கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்து, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய கடந்த வருடம் ஜனவரி 21 ஆம் திகதி – பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஆனால் நுகேகொட மேலதிக நீதவான் இது குறித்து தெரிவிக்கும் போது, சத்திய கடதாசி மூலம் விசாரணை அதிகாரியிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்ட பின்னரே மேல் நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய பிடிவிராந்து பிறப்பிக்க முடியும் என கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய, தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவைக் பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நீதிபதி கிஹான் பிலாபிட்டியவை கைது செய்ய முடியாது என, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கு விசாரணையை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 08 ஆம் திகதி நுகேகொட நீதிமன்றம் இடைநிறுத்தியதுடன், இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்