மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம்

🕔 January 3, 2021

நாட்டிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நப்கீனை இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

06ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள், மாதாந்தம் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் பாடசாலைக்கு வருவதனை தவிர்ப்பதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைக்கு தடை ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

நகரம் மற்றும் கிராமபுர பிரதேசங்களில் அரச பாடசாலைகளுக்கு வரும் மாணவிகளில் 65 வீதமானோர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளாவர். அவர்களுக்கு குறைந்த வருமானம் காரணமாக நப்கீனை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் மாணவிகளை மனரீதியாகவும் மற்றும் சுகாதார ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக இலவசமாக ‘பேட்’ வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்