உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம்

🕔 December 1, 2020

கொரோனா தொற்றினால் மரணித்த நிலையில், குடும்பத்தவர்களால் உரிமை கோரப்படாத பிரேதங்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்கள் சிலரின் உடல்களை தகனம் செய்வவதை அவர்களின் குடும்பத்தவர்கள் நிராகரித்துள்ளதோடு, அந்த பிரேதங்களின் தகனக் கிரியைக்காக அவர்களிடம் அரசாங்கம் கோரிய சவப்பெட்டிகளையும் வழங்க மறுத்துள்ளனர்.

இதனால் அவ்வாறான உடல்கள் – பிரேத அறைககளில் சில நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்