இருபதை ஆதரித்த டயனாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி

🕔 October 23, 2020

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே என்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரேயொரு நாடாமன்ற உறுப்பினரே வாக்களித்திருந்தார்.

குறித்த உறுப்பினரான டயனா கமகே, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமாருக்கு எதிராகவும் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் 06 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அரவிந்த் குமார் மட்டுமே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

Comments