இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

🕔 September 29, 2020

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

மிக நீண்ட காலமாகவே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்ய வேண்டும் எனும் கோஷம், பெரும்பான்மையின கடும் போக்காளர்களால் எழுப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினுள்ளும் – மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்கிற பேச்சுக்கள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்