20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர்

🕔 September 13, 2020

ரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 09 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான, உதய கம்பன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

மேலும் சுசில் பிரேமஜயந்த, எஸ்.வியாழேந்திரன் ஆகிய ராஜாங்க அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் டி.தொலவத்த ஆகியோரும் குழுவில் அடங்குகின்றனர்.

இந்த குழுவின் அறிக்கை இந்த மாதம் 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்