தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

🕔 August 9, 2020

மது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த எச்சரிகை்கையை மேற்படி மூன்று கட்சிகளின் தலைவர்களும் விடுத்துள்ளதாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலா தமிழ் முற்போக்கு கூட்டணி 06 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 05 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 04 ஆசனங்களையும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்றியுள்ளன.

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கு திங்கட்கிழமை வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments