முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

🕔 July 31, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரத்தினபுரி மேல் நீதிமன்றம் – குற்றவாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.

ரத்னபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்