தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு ‘கஃபே’ ஏற்பாட்டில் செயலமர்வு

🕔 July 27, 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

பொதுத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) அமைப்பினால் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான செயலமர்வு இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.

கிண்ணியா விசன் மண்டபத்தில் கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம். ராபில் தலைமையில் இடம் பெற்ற இந்த செயலமர்வில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். நிஹார் விளக்கவுரைகளை வழங்கினார்.

தேர்தல் வன்முறை சம்பவங்கள், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட வாக்காளர்களை தெளிவூட்டல் உள்ளிட்ட விடயங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

இதன்போது ‘அமைதியான தேர்தலுக்காக’ என எழுதப்பட்டு காட்சிப்படுத்தல் பதாகையில், நிகழ்வில் கலந்து கொண்டோர் கையொப்பங்களை இட்டனர்.

மேலும், தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் நாட்டு அரசியல் நிலவரங்கள் தொடர்பிலான விளக்கவுரைகளை கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் முன்வைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்