வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை

🕔 June 30, 2020

த்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை குறித்த ராஜாங்க அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களால் பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு ம்உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 02ஆம் திகதியுடன் நிறைடைந்துள்ளதால், உத்தியோகபூர்வ வாகனங்களையும் நிர்வாக உறுப்பினர்களையும் தம் வசம் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்