ஹஜ் கடமையில் இந்த ஆண்டு பங்கேற்பதில்லை: இந்தோனேசியா தீர்மானம்

🕔 June 3, 2020

ஜ் கடமையில் இம்முறை பங்கேற்பதில்லை என இந்தோனேசியா தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானத்தை அந்த நாடு எடுத்துள்ளது.

அதிகளவில் ஹஜ் யாத்திரீகர்கள் பங்கேற்கும் நாடாக, உலகில் முஸ்லிம் சனத்தொகையை அதிகம் கொண்ட நாடான இந்தோனேசியா உள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு 220,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவிருந்தனர்.

எனினும் ஜுலை இறுதியில் ஆரம்பமாகும் ஹஜ் யாத்திரை குறித்து சவூதி அரேபியா தமது முடிவை இன்னும் வெளியிடவில்லை. எனினும் உம்றா மற்றும் ஹஜ் கடமைகளை அடுத்த அறிவித்தல் வரை சவூதி அரேபியா ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியா ஹஜ் யாத்திரையில் இருந்து விலகுவதாக – அந்நாட்டு சமய விவகார அமைச்சு நேற்று அறிவித்தது. “இது மிகவும் கசப்பான மற்றும் கடுமையான முடிவாக இருந்தது” என்று சமய விவகார அமைச்சர் பச்ருல் ராசி குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது பிரஜைகள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈடுபட முடியாது என்று சிங்கப்பூர் கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்