ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

🕔 May 27, 2020

றைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தொண்டமானின் இடத்துக்கு அவரின் மகனும் இ.தொ.காங்கிரஸின் இளைஞரணி தலைவருமான ஜீவன் தொண்டமானை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் தலைவர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இ.தொ.காங்கிரஸின் உயர்மட்டக் குழு இன்று அறிவித்துள்ளது.

Comments