நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்: உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

🕔 April 7, 2020

முகக் கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெடோஸ் எடனம் கிரேபியஸ் கூறியுள்ளார்.

போதிய நீர் இல்லாதவர்கள் மற்றும் சன நெரிசலை தவிர்க்க முடியாதவர்களுக்கு முகக்கவசங்கள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

சுகாதார ஊழியர்களுக்கு முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்