மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய

🕔 March 22, 2020

நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர்தான் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளையும் நிறுத்திவிட்டு கொவிட் – 19 வைரஸ் தொற்றை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்காக செயற்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments