அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி

🕔 March 21, 2020

டைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 07 ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 04 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 22 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 304 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

Comments