நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

🕔 March 2, 2020

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என்று, அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மார்ச் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி நண்பகல் வரையிலான காலப்பகுதியை, வேட்புமனுக்களை ஏற்கும் காலமாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் ஒன்றினை – நாலரை வருடம் கழிந்த நிலையில், கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கூறுகிறது.

இதற்கமையவே, தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆரம்பமானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்