பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

🕔 February 13, 2020

ரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் கல்குலேட்டர்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வென்னப்புவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் கணக்கியல் பரீட்சையில் கல்குலோட்டர்களை பயன்படுத்த முடியுமா? என்பதை பரீட்சித்து பார்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இலங்கையில் மாணவர்கள் கல்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவது இதுவே முதன்முறை எனயாக இருக்கும். உலகத்துக்கு ஏற்றவகையில் கல்வி முறைமையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம்” எனவும் அவர் இதன்போது கூறினார்.

இதேவேளை, க.பொ.த உயர்தர கணக்கியல் பரீட்சை, விஞ்ஞானவியல், தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அறிவியல் ஆகிய பாடங்களில் (Non Programmable calculators) எனப்படும் கல்குலோட்டர்களைப் பயன்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்