கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு

🕔 January 31, 2020

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, உலகம் முழுவதும் 9700 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை எனினும், இலங்கை வந்திருந்த சீனப் பெண் ஒருவர் அந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சீனாவிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகி இருந்தன.

இவர் சீனாவின் – வுஹான் நகரில் கல்வி கற்கும் மாணவராவார்.

Comments