நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல்

🕔 January 18, 2020

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லையொன்று வரையறுக்கப்பட வேண்டும் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

ஒய்வு பெற்றுச் செல்ல வேண்டிய வயதில் நாடாளுமன்றத்துக்குள் பலர் உள்ளதாக தெரிவிக்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதற்கான திட்டமொன்று அவசிமெனவும் கூறியுள்ளார்.

அரச ஊழியர்கள் சேவையிலிருப்பதற்கு வயதெல்லை ஒன்று காணப்படும் போது, நாட்டில் சட்டம் வகுப்பவர்களுக்கு ஓய்வுபெற்றுச் செல்லும் வயதெல்லை வரையறுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை மட்டுப்படுத்துவது தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர்,  விரைவில் கட்சி தாவல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments