மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம்

🕔 October 8, 2015
Mahinda Rajapaksa - 011ஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலப் பகுதியில், பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட சுமார் 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த குழு சந்தேகிக்கிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, இது தொடர்பில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச ஆட்சியாளர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கு என்ன நடந்ததென்பது குறித்து, இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

எப்படியிருப்பினும் இதுவரையில் சேகரித்துள்ள தகவல்களுக்கமைய கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்,  நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2013ஆம் ஆண்டும் 5.31  பில்லியன் டொலர்கள் ராஜபக்ச மற்றும் அக் குடும்ப உறுப்பினர்களினால் திருடப்பட்டுள்ளதாகவும், குறித்த பணம் இந் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்