அடிமட்ட விலைக்கு தனியார் நெல் கொள்வனவு: அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை

🕔 February 26, 2019

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நெற்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்படாமை காரணமாக, தாம் அறுவடை செய்யும் நெல்லை, தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள நெற்சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என்று, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நெற்செய்கை நடவடிக்கைக்காக செலவுகள் அதிகரித்துச் செல்லுகின்ற போதிலும், நெல்லுக்கான விலைகள் குறைந்து காணப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தனியார் நெல் கொள்வனவாளர்கள் மிகவும் அடிமட்ட விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

எனவே, ஏனைய பகுதிகளில் நெற்சந்தைப்படுத்தும் சபையினர் தமது களஞ்சியசாலைகளைத் திறந்து, நெல்லைக் கொள்வனவு செய்கின்றமை போல், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை உள்ளிட்ட பகுதிகளிலும், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்