ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான மூகமூடி; இஸ்ரேல் வெளிப்படுத்தியது

🕔 November 29, 2018

ன்பது ஆயிரம் (9000) ஆண்டுகள் பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்றாகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் எனும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிங்க் மற்றும் மஞ்சள் சேன்ட் ஸ்டோன் (மணல் கல்) ஆல், நியோலிதிக் யுகத்தில் இந்த முகமூடி செய்யப்பட்டது.

“இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கன்னத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது” என்று இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோனித் லூபு ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்