16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

🕔 August 9, 2018

ரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 04 பேர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் தெரிவித்துள்ளார்.

மேற்படி கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்களில் எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் 16 பேரை பிரதிநிதித்துவம் செய்யும் மேலும் உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் சான் விஜேயலால் மேலும் தெரிவித்தார்.

Comments