பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 August 5, 2018

கடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் பகடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தண்டனை குறித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், பெற்றோருக்கு இன்று மீண்டுமொரு அறிக்கையினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ளது.

இதேபேளை, பல்கலைக்கழங்கள் அல்லது உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஏனைய மாணவர்களுக்கு செய்யும் கொடுமைகள், மனிதாபமற்ற செயற்பாடுகள், உளவியல், உடல் ரீதியான தாக்கங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 0112- 123700 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைபாடு செய்வதுடன், அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களிலும் உடனடியாக முறைபாடு செய்ய முடியுமென்றும் பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்