ஃபிபா கால்பந்து உலகக் கிண்ணப் போட்டி: அரையிறுதியைத் தாண்டி, வெல்லும் அணி எது?

🕔 July 9, 2018

– எஸ்.ஏ. அப்துர் ரஹீம் –

பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் 12 மைதானங்களில் 32 அணிகளை கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி சுற்றை அடைந்துள்ளது.

இதுவரை நடந்த கால்பந்து உலகக் கோப்பையில் போட்டிகளில் அதிகபட்சமாக 05 முறை பிரேசில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, அணிகள் 04 முறை வென்றுள்ளன. என்றாலும் இம்முறை பிரான்ஸ்,பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து , குரோஷியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று ரசிகர்களை ஆச்சியத்தில் ஆழ்த்தியுள்ளன.

அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகளை பொறுத்தவரையில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தலா ஒருதடவை உலகக்கோப்பையை கைப்பற்றிய அனுபவத்துடனும் உள்ளன. அதேவேளை, பெல்ஜியம் மற்றும் குரோஷியா இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றன.

அந்த வகையில் அரையிறுதி போட்டிகளில் நாளை செவ்வாய்கிழமை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளும், புதன்கிழமை இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகளும் மோதவுள்ளன.

இறுதி போட்டியில் சந்திக்கும் அணிகளை – பொறுத்திருந்து பார்ப்போம்.

சம்பியன் பட்டத்தைப் பெறும் அணிக்கு, இலங்கை நாணயப் பெறுமதியில் 596 கோடி ரூபா பரிசுடன் கிண்ணமும் காத்திருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்