அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

🕔 May 24, 2018

த்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றமையை, அந்த நாட்டின் பொலிஸார், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும், அதன் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் ஜுன் மாதம் 07ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments