கையைப் பிடித்திழுத்தவர் கைது; தம்பலகாமம் பகுதியில் சம்பவம்

🕔 April 1, 2018

– எப். முபாரக் –

சிறுமியொருவரின் கையைப் பிடித்திழுத்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

15 வயதுடைய சிறுமியொருவரை, தம்பலகாமம் – பொற்கேணி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் கையைப் பிடித்து இழுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமையில் இருந்த பதினைந்து வயதுடைய சிறுமியின் கையை, பாலியல் நோக்கத்துடன் சந்தேக நபர் பிடித்திழுத்ததாக, சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்துள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments