தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி

🕔 March 31, 2018

ஜின் கங்கையில் மூழ்கி இன்று சனிக்கிழமை நான்கு பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம், காலி – ஹினிதும பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

39 வயதான தாயொருவரும், அவரின் 14 வயதான மகளும், அந்த பிள்ளையின் 14 வயதான இரு நண்பிகளுமே பலியாகியுள்ளனர்.

மேற்படி நால்வரும் ஜின் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது, இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஹிந்தும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments